என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளா மழை"
- மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் உருவாகி யிருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
"டானா" புயல் காரண மாக கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற் கரை பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது.
அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்த புரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
- மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 55 கி.மீட்டர் அளவுக்கு இருக்கும்.
- மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை (14-ந் தேதி) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் (15-ந் தேதி) திருச்சூர், காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், 16-ந் தேதி 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 55 கி.மீட்டர் அளவுக்கு இருக்கும். நாளை (14-ந் தேதி) வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
- கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் இன்று மாநிலத்தில் கனமழை பெய்தது. பத்தனம்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இரவு 9 மணி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (14-ந் தேதி) இரவு 11.30 மணி வரை கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது ராட்சத அலைகள் வீசக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.
கடல்நீரால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு கப்பாடு, கொயிலாண்டி கடல் எல்லை சாலைகள் தகர்ந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. துவப்பரா பகுதியிலும் சாலை கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கோட்டயம் நகரின் மேற்கு பகுதியில் பாமரச்சால், திருவார்ப்பு, குமரகம் பகுதிகளில் பல இடங்களிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இடுக்கி பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
- தொடர்மழை பேரிடர்களுக்கு வழிவகுக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து அங்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒருசில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்ய உள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது.
இந்தநிலையில் வருகிற 9-ந்தேதி வரை கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆலப்புழா, எர்ணாகுளம் இடுக்கி திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று (7-ந்தேதி) திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை(8-ந்தேதி) திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்(9-ந்தேதி) மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், தொடர்மழை பேரிடர்களுக்கு வழிவகுக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 6 பேர் பலியாகினர்.
- மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- லட்சத்தீவு பகுதியில் வருகிற 5-ந்தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் மழை பெய்தது. இந்த நிலையில் அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் வருகிற 5-ந்தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
- ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர்.
- விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவனந்தபுரம்:
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இன்றும் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபடி இருந்தனர்.
- எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரள கடற்கரையோரங்களில் இன்று நள்ளிரவு 11.30 மணி வரை 0.6 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை 9-ந்தேதியும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள கடற்கரையோரங்களில் இன்று நள்ளிரவு 11.30 மணி வரை 0.6 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு.
- கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழை வருகிற 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் புயல், காற்று, இடியுடன் மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
- கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட கலெக்டர் ஷிபு அறிவுறுத்திஉள்ளார்.
திருவனந்தபுரம்:
இலங்கை- தமிழகம் இடையே புயல் சுழற்சி வலுப்பெற்றதால் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்தாலும் திருவனந்தபுரம் மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு கடுமையாக பெய்த மழையின் காராணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பார்வதி புத்தனாறு, பட்டம் கால்வாய்கள் நிரம்பியதால் தண்ணீர் மறுகால் பாய்ந்தது.
தெக்கமூடு பண்ட் காலனி, கவுரீசப்பட்டம், முறிஞ்சாபாலம் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசிப்பவர்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் மின் தடையும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பத்தனம்திட்டா மாவட்டத்திலும் நேற்று கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்தில் 210 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோட்ட தட்டி, சென்னீர்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சபரிமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்கவும், அவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சபரிமலையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட கலெக்டர் ஷிபு அறிவுறுத்திஉள்ளார். அதே நேரம் சபரிமலை பக்தர்கள் அல்லது யாத்திரை பயணங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 28-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
- கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழை பெய்துள்ளது.
திருவனந்தபுரம்:
வட தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 9-ந்தேதி வரை மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண அளவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகமாக பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தின் தரவுகளின்படி, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. கடந்த நவம்பர் 5-ம் தேதி வரை கடந்த ஒரு மாதத்தில் மழை குறைவாக பெய்த ஒரே மாவட்டம் வயநாடு.
அதிக மழைப்பொழிவு என்பது பருவத்திற்கான இயல்பான நிலையில் இருந்து 20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை அதிகமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்